உன் அப்பா

எனக்கு மகளாக பிறந்த
என் தாயே.

எட்டுத்திக்கும்
பாதை உண்டு
நீ எந்த பக்கம்...?

திங்கள் உண்டு
ஞாயிறும் உண்டு
நீ எந்த கிழமை...?

கல்லை கண்டாய்
கனியை கண்டாய்
கல்லும் கனிந்து
கனியாகும் என்று நீந்தாயோ..?

அழைத்த தெய்வம் ஒன்று
வந்த தெய்வம் வேறு
எந்த தெய்வம்
என்று எண்ணி
பூஜிப்பாய்..?

நம் சொந்தம் ஒன்று
உன் பந்தம் ஒன்று
என் குழந்தை நீ
நடுவில் நான்

தொடர்கதையா
பழங்கதையாய்
விடுகதையா
எது முடிவு..?
--இப்படிக்கு உன் அப்பா

எழுதியவர் : சீ.மா.ரா மாரிச்சாமி (11-Feb-20, 10:54 am)
Tanglish : un appa
பார்வை : 9509

மேலே