சுற்றுச்சூழல்
மாலை நேரம்
கார்மேகம் சூழ்ந்திருந்தது
வடக்கிழக்கு மூலையில் மழைக்கால்கள் இறங்கியிருந்தது
டீக்கடை நாயர் சொன்னார்
எங்கோ மழைப்பெய்கிறது
சில்லென்று காற்று வீசுகிறது
இங்கும் மழைக் கொட்டப்போகிறது வேகவேகமாக டீக்கடையை
மூட ஆரம்பித்தார்..
எங்கோ என்று சொன்ன
அங்கும் மழை இல்லை
மழைக் கொட்டப்போகிறது என்று
சொன்ன இங்கும் மழையில்லை..
சில மணித்துளிகள் கடந்தது
மேகமும் கலைந்தது
கருமேகம் வெண்மேகமானது
பொய்த்துப்போனது மழை
பூமியில் நல்லவர்கள் இருந்தாலும் நல்ல சுற்றுச்சூழல் இல்லைப்போலும்
திரும்பிப்போனது மழை....
.
கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்
.