வண்ணத்துப்பூச்சி

வண்ணத்துப்பூச்சி
================

பறக்கும் ஓவியம்
பிடித்துவிடாதீர்கள்
வண்ணத்துப்பூச்சி!

தேன் குடிக்கும்
மலர் பிடிக்கும்
வண்ணத்துப்பூச்சி!

பூப்போல் இருக்கும்
பூமேல் இருக்கும்
வண்ணத்துப்பூச்சி!

ஒவ்வொன்றும் ஒரு வானவில்
படைத்தவனின் பேர் சொல்லும்
வண்ணத்துப்பூச்சி!

எல்லோருக்கும் பிடிக்கும்
இந்தப் பூச்சி
வண்ணத்துப்பூச்சி!

குரல் கேட்டதில்லை
இறக்கை அசைக்கும் ஒலி கேட்டதில்லை
வண்ணத்துப்பூச்சி!

பட்டணத்தில் குறைவு
பார்த்தால் மனம் நிறைவு
வண்ணத்துப்பூச்சி!

பல கவிதைகளின் பாடுபொருள்
காற்றில் மிதக்கும் கடவுள் அருள்
வண்ணத்துப்பூச்சி!

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (8-Feb-20, 5:48 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 1313

மேலே