குளம் ஒன்று

குளம் ஒன்று

கூப்பிய மலராய்
தாமரை வாவென
அழைக்க
சில்லறை சிதறல்களாய்
அல்லிகள் பரவி
‘ப்ளக்’ எனும்
சிணுங்களாய் தண்ணீர்
துள்ளல்கள் !
அவசர பணியாய்
அங்கும் இங்கும்
அலையும் மீன்கள்
பதில் சொல்லி விட்டு
போ ஓற்றை காலில்
வெண்மை கொக்குகள்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (8-Feb-20, 10:28 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : kulam ondru
பார்வை : 124

மேலே