அவள்
உந்தன் பார்வை முதல் முதலாய்
என்மீது பட்டபோது நான் கண்டதோ
ஓர் அற்புத உணர்வு.... அதில் நான்
கண்டது மோகமில்லை, காமமும் இல்லை
அது ஓர் அபூர்வ தீர்க்கப் பார்வை
என்னை முற்றும் ஆட்கொண்டது என்னையும்
அறியாது என் கண்ணில் ஆனந்தக் கண்ணீர் !
அது ஓர் அன்புப் பார்வை ....... என்னை ஆளவந்த
அவள் காதல் பார்வை ...... கல்லும்
கனிந்து கனியாகிடும் இப்பார்வைக்கு
என்றுதான் நினைக்கின்றேன் நான்
என்றும் நான் அதற்கடிமை அவளுக்கு