போகும் இடம் தெரியாது போகின்றான்

சிலைபோல் நின்றிருந்தாய்
ஆடாது அசையாது மௌனமாய்
நான் பார்த்தபோதெல்லாம்
பார்க்காத அந்த தருணம் காத்திருந்ததுபோல்
நான் சற்று கண்ணசைந்தபோது
காணாது போய்விடுவாய் இப்படியே
சென்ற நாளெல்லாம் இன்று நினைவுக்கு
வந்தது நினைவலையாய் உன் நினைவலையாய்
என் நினைவெல்லாம் உன்னிடத்தில் உன்னிடத்தில்
மட்டுமே என்பதை எப்படி சொல்வது என்று
தெரியாமலேயே காலத்தை கடக்கவிட்டுவிட்டேன்
இன்னும் உன்னையே தேடுது என் மனம்
உனக்காக அதே இடத்தில் நிற்கின்றேன்
உனைக்கான, சிலைபோல் அல்ல பேசும்
பொற்சித்திரமாய் என் காதலியாய் உனைக்காண
இது சாத்தியமா தெரியலையே
பாவி மனதிற்கோ புரியலையே
இப்படிக்கு உனக்காக காத்திருக்கும் உன்
காதலன் நான்.....


மடல் எழுதி முடித்து விட்டான்....
தபால் பெட்டியிலும் போட்டுவிட்டான்
மடலை பெறுபவர் யார்.....
வருடா வருடம் 'வேலன்டின்' தினத்தில்
அவன் 'அவளுக்கு எழுதும் கடிதம்' அது

தனி மரமாய் ..... பித்து பிடித்தவன் போல்
போகின்றான் பாவம் போகும் இடம்
தெரியாமல்....

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (14-Feb-20, 2:41 pm)
பார்வை : 81

மேலே