அவள்

கண்ணே இன்று உன் பிறந்த நாள்
எங்கே போகலாம் சொல் அங்கே
போகலாம் உல்லாசமாய் இருக்கலாம்
இன்று முழுவதும் என்றான்...... நான்
சொன்னேன், 'அன்பே என்னருகே நீ
இருக்க எனக்கு போகுமிடம் வேறொன்றும் இல்லை
இதோ இப்போதே அறுசுவைப் பண்டங்கள்
அனைத்தும் ஒரு நொடியில் செய்து
உனக்களிப்பேன் நான் நீ மகிழ அதைக்கண்டு
இன்புறுவேன் நான் ' என்றாளே
இவள் என்ன சங்க காலத்து தமிழச்சியா
இல்லை இந்த டிஜிட்டல் காலத்தில்
வசிக்கும் அக்காலப் பெண்ணா என்று
அசைந்தது மனம் .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (14-Feb-20, 3:43 pm)
Tanglish : aval
பார்வை : 87

மேலே