புத்தகம் நடுவே மயிலிறகு

குழந்தையின்றி வாடும்
பெண்ணை
அவளது
உற்றார் உறவினர்கள்
கரித்துக்கொட்டிக் கொண்டிருக்க...
ஒரு சிறுவன் மட்டும்
ஆறுதல் கூறுகிறான்...
புத்தகத்தின் நடுவே
மயிலிறகை வைத்துவிட்டு
குட்டி போடும்
என எதிர்பார்த்து காத்திருப்பதின்
வலியை உணர்ந்தமையால்.....

எழுதியவர் : ௮.ஜீசஸ் பிரபா௧ரன் (14-Feb-20, 6:20 pm)
சேர்த்தது : ஜீசஸ் பிரபா௧ரன்
பார்வை : 93

மேலே