காதல் கவிதை உயிர் பெற்றால்
பீச் மணலில் அமர்ந்தபடி நான்
ஓர் காதல் கவிதை கிறுக்க ...
மனதில் ஓர்எண்ணம்உருவெடுத்தது
'கவிதையே நீ உயிர்கொண்டெழ மாட்டாயோ
அதோ என் முன்னே போகிறாள் அன்னக்கிளியாய்
அவளிடம் எனக்காக தூது போக' என்று
எங்கிருந்தோ வீசியது தென்றல்
கையில் நான் கிறுக்கிவைத்த காதல் கவிதை
பறந்து போனது ...... இப்போது அது
அவள் கையில் அகப்பட்டது .......
கவிதையைப் படித்த அவள் திரும்பி பார்த்தாள்
என்னைக் கண்டாள் பார்வை தந்தாள்
புன்னகைத்தாள்.... இன்னும் என்ன வேண்டும் எனக்கு
என் கவிதைக்கு உயிர்வந்ததே நான் எண்ணியவாறு!