ராஜ தந்திரமும்,,,,
கொட்டட்டும் ஒலிகள்
குடியுரிமை கேட்டு ,
கேட்கட்டும் தொனிகள்
மக்களின் குரலில் ,
அவனவன் ஆட்சியில்
போட்டது போட்டதே.
நலம்தானே மக்கள் /
நாகரீகம் மிக்க கேள்வி ,
சிந்தையில் சிரிப்பு
வெளியில் வெறும் வேஷம்
ஊர் இரண்டு பட்டால்
கூத்தாடிக்கு கொண்டாட்டம்
உனக்கென்ன குறைச்சல்
நீயொரு ராஜா ,
அங்குமில்லை, இங்குஇல்லை
நாடும், வீடும், நடு வீதியில்
அலைபாயும் லட்சணம்.
அடித்தும் துவைத்தும் பயன்/
எவனுக்கும் கவலையில்லை
ஏப்பம் விடும் ஏற்றத்தில்
அங்கு அடிக்க இங்கு வருகிறானே
யாரை நம்பி எதை நம்பி
முட்டாள் பயல் போக்கற்றவன்.
அழுவதா/ சிரிப்பதா/
அன்றும் அழுதவன் இன்றும் சிரிக்கவில்லை
அன்றும் சிரித்தவன் இன்றும் சிரிக்கின்றான்
குடியிருக்க நிலமில்லை
கோவில் குளம் எதற்கு /
அடிக்கிற காற்றில் பறக்கிற மக்கள்
அங்கும் இங்கும் தேடுகின்ற
நிம்மதி எங்கே/ உத்தரவாதம் எங்கே /
இத்தனை கோடி மக்கள் அபலைகளாய்
இன்னும் மனிதன் மனம் என்ன கல்லா/
குடிகள் தான் நாட்டின் கோவில்கள்
ஒவ்வொரு மனிதனும் தெய்வங்களே .
கோன் சிறக்க, குடிகள் செழிக்க...
இதுவே தாரக மந்திரமும்,ராஜ தந்திரமும் .