வந்து வழி மறவாதே
வந்த வழி மறவாதே
-----
குடம்குமாய் பால் அபிஷேகம்
கல் சிலைக்கு
கால் வயிறு கஞ்சி கூட இல்லை
என் ஏழை விவசாயிக்கு
பித்து பிடித்து மனிதன் மாறும்வரை
போலி பக்தி ஆட்டி படைக்கும்
பட்டை கொட்டை எல்லாம் வெளி வேஷமே
தலை கீழ் நின்றாலும் மனிதன்
கடவுளாக முடியாது
பிறவி குணம் மாறாது
என்றும் மறக்காதீர்
மறந்தும் இருந்து விடாதீர்
எல்லோரும் மரத்துக்கு மரம்
தாவும் இனத்தில் இருந்து வந்தவர்களே.
- பாலு.