ஹெல்மெட் ட்ரோல்

ஹெல்மட் விவகாரத்தால் ஹெல்மெட் திருடர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்குமென எதிர்பார்ப்பு. இன்னும் சிலநாட்களுக்குள் நாம் சந்திக்கவிருக்கும் இடர்பாடுகள்
கற்பனை வடிவத்தில்

நிகழ்வுகள்
1.ஒரகடம் அருகே பூட்டியிருந்த வீட்டினை உடைத்து மூதாட்டியின் கழுத்தினை அறுத்து ஹெல்மெட் திருட்டு.

2. ஹெல்மெட் தகறாறில் அண்ணனை வெட்டிக் கொன்ற தம்பி. மெய்யாத்தூர் அருகே பரபரப்பு

3. ஹெல்மெட் ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு. வியாசர்பாடியில் வாலிபர் வெறிச்செயல்

4. விருத்தாசலம் மு.கரைமேடு அருகே ஹெல்மெட் அணிந்து சென்ற வாலிபரை டாடா சுமோவில் விரட்டிச் சென்ற கும்பல் வெட்டி ஆற்றில் வீசி ஹெல்மட்டை கொள்ளையடித்து சென்றனர்.

5. மீன்சுருட்டியில் ஹெல்மெட் திருட்டை தடுக்க மப்டியில் வந்த போலீசாருக்கு மார்பிலும் வயிற்றிலும் சராமரி கத்திக்குத்து. கொள்ளை கும்பலை 24 மணி நேரத்திற்குள் பிடிக்க அரசு ஆணை பிறப்பித்தது.

6. மன்னார்குடியில் பரபரப்பு
ஹெல்மட் தருவதாக கூறி தவனை முறையில் பணம் வசூலித்த பிரபல சீட்டு கம்பெணி முதலாளி திடீர் மாயம். பணம் போட்டவர்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு ஆர்ப்பாட்டம்.

7. பைக் வாங்கி கொடுத்த மாமனார் ஹெல்மெட் வாங்கி கொடுக்காத விரக்தியில் மணப்பெண் எரித்துக் கொலை. நாமக்கல் ஆசாமிக்கு போலீஸ் வலை வீச்சு

எழுதியவர் : (21-Feb-20, 7:19 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
பார்வை : 71

சிறந்த நகைச்சுவைகள்

மேலே