வெங்காயம் ட்ரோல்

வெங்காயம் விலையின் உயர்வால் என்னவெல்லாம் நடக்கும்?
கற்பனை

1.
செராந்தூர் அருகே வெங்காய வியாபாரியை வெட்டிக் கொலைசெய்து விட்டு 3 கிலோ வெங்காயம் கடத்தல்
கொள்ளையர்கள் வெறிச்செயல்

2.
ஆம்லேட்டில் வெங்காயம் போடு என்று கூறியவரின் நாக்கில் தோசை கரண்டியால் சூடுபோட்ட விக்ரவாண்டி ஓட்டல் முதலாளி கைது

3.
அம்மாபேட்டை அருகே தாலி கட்டும் நேரத்தில் 25கிலோ வெங்காயம் வரதட்சனையாக கேட்டதால் நின்றுபோனது திருமணம். மாப்பிள்ளை கைது. அதே மேடையில் மணப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்தார் புளியங்குடி பூண்டு வியாபாரி. கலெக்டர் பாராட்டு.

4.
சமையலுக்காக உரித்து வைத்திருந்த வெங்காயத்தை வீட்டுக்குள் புகுந்து திருடிச்சென்றது 11 பேர் கொண்ட கும்பல். மோவூர் அருகே பரபரப்பு.

5.
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரியின் மகளை சீர்காழியை சேர்ந்த வெங்காய வியாபாரி மகன் சி.குப்புசாமி மணக்கிறார். 7 கோடி செலவில் நிச்சயதார்த்தம் கோலாகலமாய் மும்பையில் நடைபெற்றது.
விருந்தில் முழுக்க முழுக்க வெங்காய சாம்பார் பரிமாறப்பட்டது உலகத்தையே ஆச்சர்யத்தில் மூழ்க வைத்தது

6.
சாக்குமூட்டையிலிருந்து தவறி விழுந்த ஒரு வெங்காயத்தை கண்டுபிடித்து தர வேண்டி காவல்துறையிடம் சிதம்பரம் வாலிபர் விண்ணப்பம்.
வெங்காயத்தை கண்டுபிடித்து தந்தால் அதில் பாதியை எங்களுக்கு தர வேண்டும் என போலீசார் பதில் கோரிக்கை

7.
வருமான வரி சான்றிதழ் வழங்க அரை கிலோ வெங்காயம் லஞ்சமாக பெற்ற மன்னார்குடி தாசில்தார் கைது.
வெங்காயத்தை கைப்பற்றிய போலீசார் அவற்றில் கால் கிலோவை அபேஸ் செய்து கொண்டனர்.
8.
சென்னை விமான நிலையத்தில் 100கிலோ வெங்காயம் கடத்த முயன்ற வாலிபர் கைது. குற்றவாளியை
குண்டர் சட்டத்தில் அடைக்க முதலமைச்சர் உத்தரவு.
கைப்பற்றபட்ட நூறு கிலோ வெங்காயமும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் நூறு கிலோ வெங்காயத்தை பார்க்க கோடிக்கணக்கான மக்கள் திரண்டு வந்து கண்டு களித்தனர்.

9.
5 கிலோ வெங்காயம் தருவதாக கூறி ரூபாய் பத்து லட்சம் மோசடி.
திருச்சி இளைஞரை ஏமாற்றிய திண்டுக்கல் நபர்.

10.
ஆடி காரில் வெங்காயம் கடத்திய கும்பலை போலீசார் மடக்கி பிடித்த போது
கொள்ளையர்கள் காரை நிறுத்திவிட்டு காருக்குள்ளிருந்த 5 கிலோ வெங்காயத்தை எடுத்து கொண்டு தப்பி ஓட்டம்.
வீராணம் ஏரிக்கரையில் ஓடிய கொள்ளையர்களை போலீசார் ஆறு மணி நேரம் துரத்தி சென்றும் பிடிக்க இயலவில்லை.

எழுதியவர் : (21-Feb-20, 7:18 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
பார்வை : 32

மேலே