அடையாள அட்டை

வழக்கம் போல
காதல் வசப்பட்டது
நண்பரின் இதயம்

நலம் விசாரிக்கையில்
நகைப்புடன் கேட்டேன்
எப்படி காதலென்று?

வரிகளாய் சொல்வார்
பதிலென்று நினைத்தபோது
வார்த்தைகளில் முடித்தார்

"காதல்
வயது வந்தவர்களுக்கான
அடையாள அட்டை" என்று!

எழுதியவர் : மன்னை சுரேஷ் (21-Feb-20, 9:51 pm)
பார்வை : 62

மேலே