பிழை திருத்தம்

உனது கவிதைகளில்
பிழையுண்டு"
என்று இலக்கணம்
நடத்தினாள் என்னவள்

அப்படியா? எப்படி என்றேன்

"இதழில் தேண்
இருப்பதாய் கூறுகிறாய்
என் இடையை
கொடியிடை என்கிறாய்
கண்கள் ஆழ்கிணறு
கண்ணங்கள் ஆப்பிள்
இன்னும் இன்னுமென
கூந்தல் முதல் பாதம் வரை
பொய்யென பொழிந்திடும்
உன் வரிகள்
பிழையின்றி வேறு என்ன?"
என்றாள்

ஆதியிலே எழுதப்பட்டதடி
பெண்ணழகு இயற்கையின்
ஒப்பீடு என்று!

அவள் இதழ்மடித்து
முத்தமிட்டேன்
தேன் எடுப்பது
தெரிந்து கொண்டாள்!

எழுதியவர் : மன்னை சுரேஷ் (21-Feb-20, 9:56 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
பார்வை : 103

மேலே