அறிவை விரிவு செய்

அறிவை விரிவு செய்
முன்னேறலாம்...

உன் மூளைதான் மூலதனம்
சரியாக நீ அதை பயன்படுத்தினால்
எப்போதும் கைவிடாது
நுண்ணறிவு மட்டும்தான்

அறிவை விரிவு செய்
முன்னேறலாம்...

உன்னை கைவிட்டாலும்உன் முயற்சிகள் யாவும்
உன் முயற்சியை மட்டும்
நீ கைவிட்டுவிடாதே
என்றதேன் எடிசன்?

தன்னம்பிக்கையை இழக்காமல்
கண்டுபிடித்தான் பலவற்றை...!

பல கல்வி கற்று
அறிவை சொந்தமாக்கு
தினம் அனுபவம் பெற்று
தொழிலைச் சொந்தமாக்கு

நீ கேட்கும் கேள்விதான்
உண்மையை திறக்கும் சாவி
உன் திறமையை கண்டறிந்து விட்டால்
உனக்கேது தோல்வி...?

அறிவை விரிவு செய்
முன்னேறலாம்...

உன் மூளைதான்
உனக்கு உதவும்
எப்போதுமே...!

தன்னம்பிக்கை தணல்
கிச்சாபாரதி

எழுதியவர் : கிச்சாபாரதி (22-Feb-20, 3:01 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
பார்வை : 1050

மேலே