கிராமத்து மண்பாதை
சாயுங்கால அடிவானச் சிவப்பு
சிறகடித்துப் பறந்த நாரைக்கூட்டம்,
நெல்லுக்கு நீர் பாய்ச்சுகின்ற
எக்கிப்பொறி இயங்கறை சத்தம்,
வரப்புகளுள் தேங்கிய தண்ணீரின்
ஈரப்பதம் தாங்கிய குளிர்காற்று,
இல்லம் திரும்பும் பாட்டாளியின்
மிதிவண்டி மணி ஓசை,
இருபுறமும் புல்வெளி படர்ந்த
கிராமத்து ஒற்றையடி மண்பாதை....
-காவ்யா