குருவி
இலையுதிர்க் காலம்
அந்த இலையிலா மரத்துக்கு கிளையில்
வந்தமர்ந்த குருவி .....
கீழே தன் நிழலைப் பார்த்து ஏமார்ந்து
தான் பருந்தாகியது எப்போது என்று எண்ணி
பெருமையில் அங்கிருந்து பறக்க
உச்சி வெய்யலில் மேலே வட்டமிட்டிருந்த பருந்து
புயல்போல் வந்து குருவியைக் கவ்விக் கொண்டது
பாவம் குருவி பருந்தின் வாயில் விடுபட
முடியாது தவிக்க.... புரிந்துகொண்டது
தான் குருவிதான்
தன் நிழல்தான் பருந்தாய் மாறி ஏமாற்றியது என்று.