அனுபவித்தே கற்றுத் தெளிவோம்

ஊமையாக நிற்கின்றது வரலாற்று
மிச்சங்கள்

தனக்குள் பெரிய கலாச்சாரத்தை புதைத்துக்கொண்டு

தோண்டிய முயற்சியில் அனுமான
உண்மைகள்

அறிவியல்பூர்வ உண்மைகள் என
பிரிந்து நின்றாலும்

விட்டுச் சென்ற அடையாளங்கள்
சொல்லவருவதை

உணர மறுத்து அனுபவித்தே கற்றுத்
தெளிவோம்

என அடம்பிடிப்பதுதான் தொடர்கிறது
இன்னும்

எழுதியவர் : நா.சேகர் (24-Feb-20, 8:07 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 120

மேலே