முகமூடி தொடர்கிறது

இன்னிக்கு அந்த சாமியார் தாம்ப்பா..
ரொம்ப டிரண்டிங்ல இருக்காரு..... அவர் சொல்ற கைலாஷ நாட்டுக்கு போகத்தான் விண்ணப்பம் குவியுதா... இந்த காலத்துல முகமூடிக்குத்தான்.. மரியாதை... எல்லாமே முகமூடியா போச்சு... உண்மையான சாமி சிலைய கடத்தி, போலிய வைக்கிறா..... இந்த காலத்துல நிஜ சாமி சிலைகளை மட்டுமில்ல, முகமூடி இல்லாத நிஜ மனிதர்களை கண்டுபிடிக்கிறதும் கஷ்டம்தா.... ஆனா இதெல்லாம் ஒருநாளைக்கு முடிவுக்கு வரும்ப்பா...

நண்பரே... இதெல்லாம் முடிவுக்கு வரும்னு எனக்கு தோனல... ஏன்னா இங்க மருத்துவ படிப்பு எக்ஸ்ம்-ல... பிட் அடிக்க கூடாதுன்னு... பிட் பேப்பர் இருக்கான்னு செக் பன்றாங்க... ஆனா ஆளே மாறி போனது தெரியல... இங்க குரூப் எக்ஸ்ம்-ல ரிசல்டே மாறி போயிருக்கு... எல்லாம் போலியா போச்சு... முகமூடியா போச்சு...

நண்பரே... ஒரு சிலர் செய்யுற தப்புக்கு எல்லாரும் எப்படி பொறுப்பாக முடியும்...? இந்த சமூகம் வயல் மாதிரி... களையும் இருக்கும்... நெற்பயிரும் இருக்கும்... நாமதான் களை எது...? பயிர் எதுன்னு.. பாா்த்து நடக்கனும்.... அதுக்கும் மேல சொல்லணும்னா.. அவங்க... அவங்க... தேவைக்கேற்றப்படி முகமூடி அணியுறாங்க... இது சின்ன வயசுலேயே ஆரம்பம் ஆயிடுது... உதாரணத்துக்கு நமக்கு லீவு வேணும்னா... லீவு எடுக்கிறதுக்கு முன்னாடியும்.. லீவு எடுத்த மறுநாளும் உடம்பு சரியில்லாத மாதிரி... ஒரு முகமூடி... இது ஸ்கூல்ல ஆரம்பிச்சு ஆபிஸ் வரைக்கும் தொடருது.... பிறகு அதுவே பழகிடுது... உண்மைக்கான அங்கீகாரம் கிடைக்கிற வரைக்கும் இது தொடர்கிறது.....!!!
-நட்புடன் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : நளினி விநாயகமூர்த்தி (25-Feb-20, 10:09 am)
பார்வை : 149

மேலே