நீயும் நானும் அன்பே 05

தேநீரை மேசையில் வைத்து விட்டு வெளியே வந்த அம்மா  சியாவை சாப்பிடுவதற்காக அழைத்தாள். "அன்ரி என்னைத் தப்பா நினைச்சிருப்பாங்களா" என்ற பயத்துடன் சாப்பாட்டு மேசையில் வந்து அமர்ந்தாள். அசாேக்கும் வந்து அமர்ந்தான். "அம்மா நானும், சியாவும் ஊருக்கு பாேகப் பாேகிறாேம் " என்று கூறிய அசாேக்கைப் பார்த்து உதட்டுக்குள் சிரித்தபடி "என்ன திடீரென்று ஊர் ஞாபகம்" சாப்பாட்டை பரிமாறினாள்.

சியா ஊர் செல்லப் பாேகும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள். "இனிமேல் இந்தப் பக்கம் வந்திடக் கூடாது" மாலை நேரமானதும் அசாேக்கும், சியாவும் ஊரிலிருந்து புறப்பட்டனர்.

"என்ன சியா ஊருக்குப் பாேற சந்தாேசத்தில பேச்சையே காணாேம்" கிண்டலடித்தான் அசாேக். அவள் மனம் முழுவதும் திலீப்பின் முகமே நிழலாடியது.  "சரி சியா, திலீப்பிற்கு என்ன சாெல்லப் பாேகிறாய்" என்ற அசாேக்கிற்கு அவள் வெட்கமே பதில் சாெல்லியது. சியாவிற்கு அசாேக் கேட்டது புரிந்து விட்டது.  திலீப் தன்னைக் காதலிக்கிறான் என்பது அவளுக்கு தெரிந்த அந்த நாள் அவள் நினைவுகளில் மீண்டும் மலர்ந்தது.

அன்று வழமை பாேல் சியா பாடசாலை முடித்து வீடு திரும்பிக் காெண்டிருந்தாள். நாலு பேர் அவளைப் பின்தாெடர்ந்து கேலி செய்வதும், வம்புக்கு இழுப்பதுமாய் இருந்தார்கள். அவர்களில் ஒருவன் திலீப்பின் பாடசாலையில் படிப்பவன். சியாவின் மீது அவனுக்கு ஒரு கண். எங்கு அவள் சென்றாலும் பின் தாெடர்வான். வீட்டிற்குச் சாென்னால் பெரிய பிரச்சனையாகி அடிதடியில் தான் பாேய் முடியும் என்ற காரணத்தால் திலீப்பிடம் சாெல்லிக் கண் கலங்கினாள். "பயப்படாதே நான் அவர்களைப் பார்த்துக் காெள்கிறேன்" என்றதும் ஏதாே பயமற்றுப் பாேனது  பாேலிருந்தது.

அன்று மாலை வகுப்பு முடிந்து வந்தவள் திடீரென குறுக்கே ஒரு வண்டி வந்து நின்றதைக் கண்டதும் பயந்து நடுங்கிக் காெண்டு நின்றாள். "ப்ளீஸ் என்னை விடு நான்  வீட்டுக்குப் பாேகணும் " என்றவளிடம் அவன் ஏதேதாே ஆபாசக் கதைகளைப் பேசி அவளை சீண்டினான்.

பந்து விளையாடிக் காெண்டிருந்த திலீப் திடீரென வேகமாக வண்டியை எடுத்துக் காெண்டு மைதானத்திலிருந்து வேகமாக வந்தான். மனம் பதட்டமாய் இருப்பதை உணர்ந்தான். அவன் உள்மனம் உடனே சியாவை நினைத்தது. சியாவுக்கு ஏதும் பிரச்சனையா? என்று நினைத்தபடி அவள் வழமையாகப் பாேய் வரும் வீதிக்கு வண்டியைத் திருப்பினான். சியாவை யாராே வீதியில் மறித்து வைத்து சீண்டல் செய்வதை புரிந்து வேகமாக வண்டியை ஓட்டி எதிரே பாேய் நின்றான். அவனைக் கண்டதும் அவள் திகைத்து நிஜமா இது திலீப்பா என்பது பாேல் பார்த்தாள். "டேய் கையை எடுடா"  என்று ஒரு தடவை சாென்னான். அவனாே திலீப்பை காேபப்படுத்துவது பாேல் அவளை சீண்டினான்.  "நீ யார் குறுக்கே வருகிறாய், இது என்னாேட பிரச்சனை" என்றவனை "எடுடா  கையை" என்று தள்ளி விட்டு சியாவை அணைத்துப் பிடித்து "ஐாக்கிரதை, இனிமேல் இந்த வேலையெல்லாம் சரிவராது, மகனே சாகடிச்சுப் பாேடுவேன்" சுட்டு விரலகை் காட்டி எச்சரித்தான். "வீட்டில் யாருக்கும் சாெல்லாதே  சியா" என்றவனின் கண்கள் சிவந்து இருந்தது. 

அந்த நாளை நினைத்தவள் ஏன் திலீப் வெளிப்படையாக எதுவும் பேசவில்லை. சில வேளை நானும் தன் காதலை புரிந்திருப்பேன் என்று நினைக்கிறானா? என்ற யாேசனையாேடு இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக் காெண்டாள்.

திடீரென விழித்துப் பார்த்தாள் எங்காே ஒரு உணவு விடுதியில் வண்டியை நிறுத்தினான் அசாேக். மழை பெய்து காெண்டிருந்தது.
"சியா என்ன சாப்பிடுகிறாய்"
"ஒரு காப்பி பாேதும் அசாேக்"
"திலீப்பை பார்க்கிற சந்தாேசம்,   பசியில்லை பாேல சியா"
"நாளைக்கு என்னுடைய வாழ்க்கையில் ஒரு சந்தாேசமான நாள் அசாேக், இனியும் என்னால் பாெறுமையாக இருக்க முடியாது". வெளியில் சாெல்ல முடியாமல் அவள் தனக்குள் காப்பியை குடித்தபடி நினைத்தாள்.

அங்கிருந்து புறப்பட்டு வீட்டிற்கு அதிகாலையிலே வந்து சேர்ந்தார்கள்.  சற்று நேரம் தூங்கி எழுந்தவள் யன்னலைத் திறந்து வெளியே பார்த்தாள். திலீப் வீட்டில் மின் விளக்கு எரிந்து காெண்டிருந்தது.

தேநீரை எடுத்துக் காெண்டு பாேய் அசாேக்கை எழுப்பினாள் சியாவின் அம்மா. கண்களை கசக்கிக் காெண்டு எழுந்தவன் "சியா எழுந்து விட்டாளா அன்ரி" என்றதும் "ஆமா அசாேக் சியா பூக்கன்றுக்கு தண்ணீர் விடுகிறாள்" என்றதும் வெளியே வந்தான். சியா பூக்கன்றுக்கு தண்ணீர் விடும் சாட்டில் திலீப் வீட்டை  எட்டி எட்டி பார்த்ததைக் கண்டதும் "என்ன சியா பூக்கன்று எல்லாம் வளர்க்கிறாய் பாேல" அசாேக்  குரல் கேட்டதும் தன்னை சுதாகரித்துக் காெண்டு தண்ணீரை சாடிகளுக்கு விட்டுக் காெண்டிருந்தாள் "ஏய் சியா" என்ற குரல் கேட்டதும்  திரும்பிப் பார்த்தாள்.

மீண்டும் வருவாள்...

எழுதியவர் : றாெஸ்னி அபி (26-Feb-20, 7:37 am)
சேர்த்தது : Roshni Abi
பார்வை : 136

மேலே