பாவம் மனிதன் 🐒

பாவம் மனிதன் 🐒.

என்னடா மனிதன் இவன்.
காலையில் 'சரி' என்பதை மாலையில் 'தவறு' என்கிறான்.
மாற்றி, மாற்றி பேசுகிறான்.
நிலையான எண்ணம் இல்லை.
உறுதியான மனமும் இல்லை.
எதிலும் நம்பிக்கையும் இல்லை.
எதிலும் தெளிவும் இல்லை.
குழப்பம் நிறைந்த மனதுடன்,
நல்லது எது, கெட்டது எது, என்ற தெரியாமல்
எதிலும் சந்தேக கண்ணோட்டதுடன்
திக்கு தெரியாத காட்டில் வழி தெரியாமல்
முழி பிதுங்கி
தவிப்பவனாய் தவிக்கிறான்.
வாழ்க்கையை சலிப்புடன் வாழ்கிறான்.

எளியவனிடம் ஒரு பேச்சு.
வலியவனிடம் ஒரு பேச்சு.
நிறம் மாறும் பச்சோந்தியே மேல்.
காரியம் அக வேண்டும் என்றால் காலை பிடிக்கிறான்.
காரியம் முடிந்தவுடன் காலை வாரி விடுகிறான்.
சுயநல புலி.
காரிய பைத்தியம்.
சகமனிதனை நேசிக்க தெரியாத
முட்டாள்.

ஆண்டவனிடம் வேண்டுதல் செய்யாமல் பேரம் பேசுகிறான்.
வாழ்க்கையை வியாபாரமாக நினைக்கிறான்.
இயற்கையாய் பிறந்த இவன் இயல்பாய் இல்லாமல்
இயந்திரம் போல் வாழ்கிறான்.
இனிமையான வாழ்க்கையை பேராசை கொண்டதால் இம்சை ஆக்கி கொள்கிறான்.
நிம்மதியில்லா வாழ்க்கை என புலம்பிகிறான்.
பெரு மூச்சு விடுகிறான்.
மூச்சே சுவாசிக்க முடியாமல் ஒரு நாள் மடிந்தே போகிறான்.
என்னடா மனிதன் இவன்.
ஏன் பிறந்தோம் என்று விடை தெரியாமலேயே இறந்து விடுகிறான்.
உண்மையில் பாவம் மனிதன்.


- பாலு.

எழுதியவர் : பாலு (26-Feb-20, 2:18 pm)
சேர்த்தது : balu
பார்வை : 161

மேலே