திரும்ப வரமாட்டாய்

திரும்ப வரமாட்டாய்
ஏன் மெளனம்
காதலின் மொழி
மெளனமொழியா???
கொஞ்சு மொழி எங்கே
கெஞ்சு மொழி எங்கே அந்த
கோப மொழிதான் எங்கே
காதலிக்கும்போது
கண்களால் பேசினாய்
பிரியும்போது
கண்ணீரால் பேசுகின்றாய்

திருமண அழைப்பிதழ்
தருகிறாய்...
தடுமாறுகிறது கைகள்
இருவருக்கும்...
கொடுக்கவா வேண்டாம
உனது கைகள்..
வாங்கவா வேண்டாம
எனது கைகள்...
வாங்கி கொண்டது
எனது மனம் கல்லாகி..

அழைப்பிதழ் கொடுத்தாய்
அழைக்கவில்லை
வரவழைக்கவும்
வரவில்வில்லை....
திருமணத்திற்கு
வரவேண்டாமென்றாய்
ஒப்பு கொண்டேன்...

கடைசியாக

சென்று வருகின்றேன்
என்றாய்...
தலையசைத்தேன்..

செல்கிறாய் ஆனால்
திரும்ப வரமாட்டாய்...

- அன்புடன் அருணகிரி..

எழுதியவர் : அருணகிரி (26-Feb-20, 4:17 pm)
சேர்த்தது : அருணகிரி
பார்வை : 196

மேலே