உண்மை காதல் 🌹

உண்மை காதல்!🌹
------------
கவிதை ஒன்று வேண்டும் காதலி காதலனிடம் கேட்டாள்.
என்ன தலைப்பு அவன் கேட்டான்.
உங்கள் விருப்பம் அவள் சொன்னாள்.
அவன் எழுதினான் இப்படி .
"நீயே ஒரு கவிதை!!
கவிதைக்கு கவிதையா !!
நீ புடவை உடுத்தியபோது
மரபு கவிதை!
நீ சுடிதார் அனியும் போது
புது கவிதை!
நீ ஜீன்ஸ் பேண்ட்டில்
ஹைக்கூ !
நீ கவிஞருக்கு கைவந்த கலை!
நீ தமிழ் சிற்பி செய்த அழகு சிலை !
உன் பார்வைக்கு ஏங்கும் ஓராயிரம் விழிகள்!
உன் மின்னல் பார்வை பட்டவுடன் மலை போல் குவிந்தன காதல் மனு.
அத்தனையும் உதாசீனம் செய்துவிட்டு
சென்றுவிட்டாய் நீ!
அந்த கடித குவியலில் இரண்டு தேர்ந்தேடுத்தேன்.
ஒருவன் எழுதியிருந்தான்,
நீ என்னை காதலிக்க மறுத்ததாலும்
நீ என் பெயர் சொல்லி திட்டிவிடு
என் பிறவி பயன் அடைந்துவிடுவேன் என்று!
மற்றொருவன்
என் வாக்குமூலம்
இது தான்
நீ என்னை காதலிக்கவில்லை என்றால்
நாளை செய்திதாள் முதல் பக்கத்தில்
கொட்டை எழுத்துக்களில் வரும் நான் இறந்து விட்டேன் என்று!
முதல் கடிதம் எழுதியவன் காதல் போராளி போலும் !
இரண்டாவது கடிதம் எழுதியவன்
காதல் தீவிரவாதி போலும்!
இதை இரண்டை எடுத்து கொண்டு அவளிடம் கொடுத்தேன் .
அவள் அதை பிரிக்கவும் இல்லை, படிக்கவும் இல்லை
என்னை பார்த்து கூறினாள்
நான் ஒரு 'சாரஸ்' பறவை !!
நீயும் தானே? என்றாள்.
- பாலு.
(சாரஸ் பறவை , கொக்கு இனம், நீண்ட கழத்துடைய அது, நம் மனிதர்களை போல் ஒருவனுக்கு(மனசாட்சி உள்ளவர்கள்) ஒருத்தி என்ற பன்பை பின்பற்றும் ஓர் அதிசிய பறவையினம்)

எழுதியவர் : பாலு (26-Feb-20, 10:28 pm)
சேர்த்தது : balu
பார்வை : 203

மேலே