உனக்காகவும் நம் காதலுக்காகவும் 555

என்னவளே...


விரும்பாமல் கரை ஒரே
இடத்தில இருந்தாலும்...

அலைகள்
ஒவ்வொரு முறையும்...

கரையை
தொட்டுவிட்டுதான் செல்கிறது...

நீ என்னை
வெறுத்து சென்றாலும்...

காலை மாலை உன் நிழலை
தொட்டுவிட்டுத்தான் செல்கிறேன்...

உனக்கு பிடிவாத குணம்
எனக்கு இளகியமனம்...

சேர்வது
கடினம்தான் என்றாலும்...உ

ன்னை சேர துடிக்குதடி
என் உள்ளம்...

கல்லுக்குள்ளும் ஈரம்
உண்டு என்பார்கள்...

உன் மனதுக்குள் நான்
ஒருநாள் வருவேனடி...

இன்று உன் நிழலை
தொட்டு செல்லும் நான்...

நாளை உன் கரம்
கோர்ப்பேனடி...

ஓவ்வொரு நாளும்
நம்பிக்கையுடன்...

நானும் காத்திருக்கிறேன்
உனக்காகவும்...

நம்
காதலுக்காகவும்.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (2-Mar-20, 4:34 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 405

மேலே