இயற்கை

இயற்கை பாவம் உறங்குவதே இல்லை
ஓயாது மாறி மாறி வரும் பருவங்களாய்
நம்மை உயிர் வாழ வைக்கும் காற்றாய்
வாழ்விற்கே அடிகோலாம் ஆதவனாய்
இரவில் ஓய்ந்து தூக்கம் மனங்களுக்கு
குளிர்நிலவாய் இதம் தந்து
ஓடும் நதியாய் ஆடி வரும்
நீர் வீழ்ச்சியாய்
ஓயாது ஆர்ப்பரிக்கும் கடலை அலையாய்
கரை தேடி ஓடிவரும் கடலாய்
பசுமைகொழிக்கும் கானகமாய்
மாமலையாய் புல்வெளியாய்
பூஞ்சோலையாய் கனிகொழிக்கும் தோப்பாய் இப்படி பார்க்கும் நம் கண்களுக்கு
விருந்தளிக்க இயற்கையன்னை அவள்
பாவம் உறங்குவதே இல்லை
பிள்ளையைப்பேணி வளர்க்கும் தாய்போல
இயற்கையின் வனப்பை கண்டு மகிழ்ந்து
கண்களில் களைப்பு தவழ உறங்கிவிடுகிறோம்
இயற்கை...... உறங்குவதே இல்லை
நம்மை வாழவைக்க ....
இயற்கை உறங்கிவிட்டால்
சலனம் ஏதுமில்லாது அழிந்திடும் அவனி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (7-Mar-20, 2:10 pm)
Tanglish : iyarkai
பார்வை : 253

மேலே