பூச்சி ஆட்சி மூச்சி இன்றே முடியட்டும்
கொரானா கொரானா கொலைக்காரனா
வாறானே வாறானே வெள்ளக்காரனா
குடியுரிம இல்லாம தன்னால வாறான்
வாழ முடியாம சாகத்தான் போறான்
இன்று அவன் சாகத்தான் போறான்
சைனாவில் பிறந்தவனே சங்கட வீணை மீட்டாதே
காற்றில் கலந்து கடவுள் உசிரை எடுக்காதே
காய்ச்சலும் மூச்சுத் திணறலும் அறிகுறியாம்
அறிகுறி அறிஞ்சா மருத்துவர அணுகணுமாம்
உடலு உறுப்பு இயக்கத்த இழக்க வச்சி கொல்லுதுங்க
சாதி மதம் பாக்குதில்ல
சாணி குடிச்சாலும் தீருதில்ல
நில வேம்பு நீரு குடிக்கணுமாம்
நல்ல மிளகு உணவில சேர்க்கணுமாம்
தேங்கா பூண்டு இஞ்சி தேனு அன்னாசி பூவு நீரு
தயங்காம உணவுல சேர்க்கணுமாம்
மஞ்ச பூசி குளிச்சா
கிருமி ஒண்ணும் தொத்தாதாம்
பப்பாளி இலச் சாறு பருகி வந்தா
ரத்த செல்கள் கூடிடுமாம்
நோய் நொடி கிட்ட நெருங்காதாம்
உடல வெயிலில நனைக்கணுமாம்
கைகள சுத்தமா வைக்கணுமாம்
கைகள குலுக்கிட வேணாமாம்
வேப்பிலை சாறு வெந்தயத்தோடு
வெள்ளிக்கிழமை குடி
பிணி வரும் முன்னே முடி
உணவு தான் மருந்து எங்களுக்கு - உன்
கனவுதான் பலிக்காது பிறகு நீ இங்க எதுக்கு
உசிரு தின்னும் பூச்சி உனது
ஆட்சி மூச்சி இன்றே முடியட்டும்
அறம் பாடி கவிஞர் படை
உலகம் ஏழும் காக்கட்டும்..!