மகளிர் தினம் 08032020

மகளிர் தினத்தன்று
மாந்தரைப் போற்றி விட்டு
மற்ற நாட்களிலே
மட்டம் தட்டுவது
மானிட ஜாதியில்
மட்டுமே சாத்தியம்
மட்டற்ற சந்தோஷமும்
மாசற்ற அன்பும்
மங்கையின் உணர்விலே
மடமடவென்று கலந்து விட்டால்
மனதின் உண்ர்ச்சிகள்
மடை திறந்த வெள்ளம் போல்
மளமளவென்று வெளி வரும்
மதிநுட்பம் தான் கொண்டு
மாபெரும் வெற்றிதனை
மலையளவு பெற்றிடுவர்
மற்ற பெண்களின் சாதனையை
மனம் குளிர பாராட்டும் யாவருமே,தத்தம்
மனைவியின் பெருமைதனை
மறக்காமல் போற்றுவதே
மகளிருக்கு நாம் செய்யும்
மரியாதை என்பேன் நான்
மன்னிப்பு என்கிற
மகத்தான வார்த்தையின்
மகத்துவம் அறிந்துகொண்டு
மனதார சொல்லிடுவோம், நம்
மடமையை அகற்றிடுவோம்

மண்ணிலே வாழ்கின்ற அனைவருக்கும்

மகளிர் தின சிறப்பு வாழ்த்துக்கள்

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (8-Mar-20, 3:24 pm)
பார்வை : 7129

மேலே