என் அபிநேத்ரி
காதல் மொழி பேசி
நீ உறவாடியபோது
இசைத்தமிழாயானது அது
என்னை கேட்க கேட்க பரவசப்படுத்தி
மௌனமாய் நீ என்னைப்
பார்த்து நின்றபோது
உந்தன் இதழ்கள் மூடி இருக்கையில்
உந்தன் இமைகள் திறந்து மூடி
உந்தன் விழிகளுக்கு அரங்கமாய் மாறி
அபிநயங்கள் புரிந்திட
உந்தன் மௌனமே பார்வையானது
பார்வையே பரதமானது விழியாய்
எந்தன் ப்ரிய சகி அபிநேத்ரியே