உயிர் கொடுக்க வா

இணையத்தில் மட்டுமே
இயங்கி கொண்டிருக்கும்
என் கற்பனைகள் யாவும்
எந்தன் கண் முன்
தோன்றும் நாள் எந்நாளோ?

உன்னை நினைத்து..
கவிதையாய் வடித்து..
கரைந்து போவது..
என் கற்பனைகள் மட்டுமல்ல..
எந்தன் வாழ்க்கையும் தான்!!!

வா பெண்ணே!
கவலைக்கிடமாக கிடக்கும்
என் கற்பனைகளுக்கு
உயிர் கொடுக்க வா!!!

❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேக் உதுமான் (10-Mar-20, 2:01 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
Tanglish : uyir kotukka vaa
பார்வை : 345

மேலே