தாயின் ஆதங்கம்
தவழ்ந்து சிரிக்கிறான்
என் தங்கமகன்
இமை மூடாமல்
பார்த்து இரசிக்குது
என் கரு விழி
இரண்டும்...
கருவிலே உன்னை
சுமந்த போது
குங்குமப் பூ
பால் பருகி
கருமேகம் மறைத்த
பகலவனாய் கருவிலே
உன்னை காத்தேனே
தவழ்ந்து தவழ்ந்து
சுற்றி வருகிறாய்
நிலவைப்போல
என்னை -ஆனால்
பிறக்கியான் போல
பிரகசமாய் இருந்தாலும்
நிலவில் தடுமாறி
செயல்யிழந்த விக்ரமாய்
தவழ்கிறாயே
என் தங்கமாகனே.