போட்டிப் பெயர்கள்

ஏன்டா மாப்பிள்ள உனக்கு மட்டும்தான் உம் பொண்ணுக்கு இந்திப் பேரை வைக்கத் தெரியுமா? உம் பொண்ணுப் பேரை உன் வாயால ஒருதடவை சொல்லுடா.
@@@@@@
அதுக்கென்ன? சொன்னாப் போச்சு. எம் பொண்ணுப் பேரு 'அஞ்சனா'. அனுமான் சாமியோட அம்மா பேருடா. இந்தப் பேருக்கு என்னடா கொறைச்சல்.
@@@@@
நான் உம் பொண்ணு பேரைக் கொறை சொல்லுலடா. எம் பொண்ணு பேருக்கு இணையா உம் பொண்ணுக்கு ஒரு இந்திப் பேரை உன்னால வைக்கமுடியுமான்னு நான் சவால் விட்டன்டா. உம் பொண்ணும் எம் பொண்ணும் ஒரே நாள்ல ஒரே ராசி, நட்சத்திரத்தில் பொறந்தவங்கடா. அதுக்குத்தான் நான் விட்ட சவால்.
@@@@@@
உஞ் சவாலை முறியடிச்சுட்டன்டா.
பெயராய்வு மையத்தில் பத்தாயிரம் ரூபாய் கட்டி உஞ் சவாலை முறியடிக்கிற பேரா வாங்கிட்டு வந்தன்டா.
@@@@@
இங்க, பேரைச் சொல்லு பாக்கலாம்.
@@@@@
'குஞ்சனா' வாட் எ ஸ்வீட் நேய்ம். (Kunjana = forest girl).
@@@@@@
நீ செயிட்டடீடா. இந்தா நம்ம ஒப்பந்தப்படி பத்தாயிரத்தை எடுத்துக்கா..
@@@#@@
உம்..க்ஹூம். எங்கிட்டயே சவாலா?

எழுதியவர் : மலர் (11-Mar-20, 10:16 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 111

மேலே