53 மன்னனைக் குடிகள் உழைப்பால் காப்பர் – குடிகளியல்பு 7

வெண்டளை பயிலும் கலி விருத்தம்

கோவரிய சீவன் குடிகளுட லாவார்
சீவன்சும் மாவிருக்கத் தேகமுழைத் தோம்புதல்போற்
பூவலய மீதினில்தம் பூட்சிகளி னாலுழைத்துக்
காவலனைக் காக்கக் கடனாங் குடிகளுக்கே. 7

- குடிகளியல்பு
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”நாட்டுக்கு மன்னன் அரிய உயிர் போலவும், குடிமக்கள் உடல் போலவும் ஆவர். உயிர்க்கு எந்த வேலையுமின்றி, உடல் உயிருக்கு உழைத்துக் கொடுப்பது போல, இவ்வுலகத்தில் குடிமக்கள் தங்கள் உடலால் உழைத்து, நாட்டைக் காக்கும் மன்னனைக் காப்பது மக்களின் கடமையாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

கோ - மன்னன். பூட்சி - உடம்பு. காவலன் - மன்னன்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Mar-20, 6:53 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 41

மேலே