கல்லூரி நினைவலைகள் 1

2004 முதல் 2006 வரை சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் diplamo in pharmacy படித்த அழகான காலங்கள்.
நான் மற்றும் எனது நட்புவட்டங்கள் மதிய உணவு இடைவேளை பொழுதை சிதம்பரம் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் கொண்டாடி மகிழ்வது வழக்கமான ஒன்று.
அந்த காலகட்டம் அளவுக்கதிகமான மனமகிழ்ச்சியை எனக்கும் எனது நட்புவட்டத்தினர் அனைவருக்கும் அள்ளிக்கொடுத்தது என்று சொன்னால் அதுவே மெய்யாகும்.

இரண்டாமாண்டு பயில்கையில் ஒருநாள் உணவு இடைவேளையின் போது வழக்கம் போல ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் உணவருந்திவிட்டு அரட்டை அடித்துக்கொண்டிருந்தோம். அப்போது முதலாம் ஆண்டு மாணவர்கள் இரண்டுபேர் எங்களிடம் சிக்கிக்கொள்ள முதல் முறையாக நாங்களும் ராகிங் செய்ய பழகினோம் அவர்களிடம். எங்கள் ஒவ்வொருவருக்கும் மனதில் மரண பீதி இருந்ததாலும் கண்களில் காட்டிக்கொள்ளாமல் ஜூனியர் மாணவர்களை ராக் செய்தோம்.

வடிவேலு ஒரு படத்துல சொல்வாரு, நாம ஒருத்தன மெரட்டும்போது அவன் பயந்து பின்வாங்குனா அவன் நமக்கு அடிமை, அதுவே அவன் துணிச்சலா எதிர்த்து வந்தான்னா அவனுக்கு நாம அடிமை..
பெரும்பாலும் இந்த வசனத்துல ரெண்டாவதா வடிவேல் சொல்லும் அவனுக்கு நாம அடிமை அப்படிங்கிற மாதிரிதான் எங்களுக்கு நடக்கும்.
ஆனா அன்னைக்கு அந்த 2 பசங்களும் எங்களுக்கு பயந்து பின்வாங்கிட்டாங்க. அதுக்கப்பறம் சொல்லவா வேணும். சீனியர் அண்ணனுங்க பயங்கரமான ரௌடிங்க போல என்னும் மரண பீதியை அந்த தம்பிகளிடம் நாங்கள் உருவாக்கி கெத்தாக நின்றபோது எங்கள் நட்பு வட்டத்தில் சிறப்பான ஒரு நண்பன் இருக்கிறான். அவன் பெயர் பாலமுருகன் . அவன் வேக வேகமாக நாங்கள் ராகிங் செய்து கொண்டிருந்த இடத்தை நோக்கி வந்து எங்களிடம் என்ன இங்கு நடக்கிறது என்று கேட்க நாங்கள் கூறினோம் இதுதான் நடந்துகொண்டிருக்கிறது என்பதை விளக்கமாக அவனிடம்.

உடனே அவனது பார்வை ஜூனியர்கள் பக்கம் திரும்பியது . அவனும் அந்த தம்பிகளை ராகிங் தான் செய்யப்போகிறான் என நினைத்து அவனிடம் 'மச்சான் நாங்க ஏற்கனவே ரொம்ப அவனுகள பயமுறுத்தி வச்சிருக்கோம் நீயும் இப்ப ராக் பண்ணுனா அவனுங்க அழுதுடுவானுங்கடா மச்சான் வேணாம்டா' என்று சொல்ல பாலா எங்களை எல்லாம் உதறித்தள்ளிவிட்டு அவனது கொடூர பார்வையை அந்த தம்பிகள் பக்கம் திருப்பி அவர்களிடம் கேட்டான் பாரு ஒரு கேள்வி அந்த கேள்விக்கு அப்பறம் அந்த பசங்களுக்கே புரிஞ்சிருக்கும் நாங்கள் டுபாக்கூர் ரௌடிகள் என்பது.

தம்பிகளை தொடை நடுங்கும் விதத்தில் விரட்டி வைத்திருந்த அந்த தருணங்களை ஒற்றை கேள்வியால் தவிடு பொடியாkகிவிட்டான் பாலா. . கொடூர பார்வையை மட்டும்தான் பாலா தம்பிகளிடம் திருப்பினான் . ஆனால் கேட்ட கேள்வியோ கேணைத்தனமாக இருந்தது . பயந்தவனிடம் 'பர்ஸ்ட் இயர் புக் என்கிட்ட இருக்கு பாதி விலைக்கு எடுத்துக்கிறியா? என்று கேட்டான் அந்த பாலு.

அந்த தருணத்தை இன்றுவரை கல்லூரி நண்பர்கள் நாங்கள் சந்திக்கும்போது சொல்லி மகிழ்வோம். அப்படி வெள்ளந்தியாக இருந்த பாலு இன்று வெளிநாட்டில் கை நிறைய சம்பளம் வாங்குகிறான் என்பது அன்றைய காலகட்டத்தில் யாராலும் யூகிக்க முடியாதது . பள்ளியிலும் சரி கல்லூரியிலும் சரி நாம் யாரை கேலித்தனமாய் சித்தரித்திருப்போமோ அவர்கள் அனைவரும் வாழ்க்கையில் நம்மைவிட வேகமான வளர்ச்சியால் நமக்கே வியப்பாய் அமைந்திருப்பார்கள் என்பது எனக்கு மட்டுமல்ல ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நிச்சயமாய் நடந்திருக்கும்.
இந்த இடுகையை படித்துக்கொண்டிருக்கும் உங்கள் வாழ்விலும் கூட! .

எழுதியவர் : (13-Mar-20, 5:49 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
பார்வை : 145

சிறந்த நகைச்சுவைகள்

மேலே