சிரிக்க
ஒரு வீட்டுக்கு வேண்டாத விருந்தாளி வந்திருந்தார்! ! ! !
கணவன் மனைவியிடம் காபிபோட்டு கொண்டுவருமாறு சொன்னான்..
''இங்கே காபிபொடியும் இல்லை..சர்க்கரை யும் இல்லை..''அடுப்ப ங்கரையிலிருந்து சத்தமிட்டார்...
''எப்போதும் உனக்கு பஞ்சப்பாட்டுதான ்..''கணவன் சத்தமிட வாய்பேச்சு முற்றி அறைந்துவிடுகிறான்...
''இந்த அநியாயத்தை கேட்க ஆளில்லையா..'' என்று அழ ஆரம்பித்தாள்...
இந்த அமளி துமளியை கண்டு சொல்லிக்கொள்ளாமல் வெளியேறினார்..அந்த விருந்தாளி...
அவர் வெளியேறிவிட்டதும் ''கொல்'' என சிரித்தனர் கணவனும் மனைவியும்...
''எப்படி இருந்தது என் நடிப்பு..அடிப்பது போல்அடித்தேனே.. .''என்றான் கணவன்..
''ஆஹா..அழுவது போல் அழுதேனே..எப்படி இருந்தது. என் நடிப்பு...''என்றாள் மனைவி...
''பிராமாதம்..'' என்றான் கணவன்...
பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது...
''நானும் போவதுபோல் நடித்தேனே...எப்படி இருந்தது என் நடிப்பு?????