எழுத்து காம்

மரித்து போன என் கவிதைகள் 
உயிர்த்து எழுந்தது உன்னால்......


ஆம்
நாங்கள் 90'ஸ் கிட்ஸ்
கவிதை எழுதினால் குற்றமாம்

காதல் வந்தால்தான்
கவிதை வருமாம்
மீறி எழுதினால்
கண், காது, மூக்கு
வைத்து பேசி
மேலும் சிண்டும் முடிவார்கள்......

எழுதிய கவிதையை
நான் மட்டும் ரசித்து
யாரும் பார்க்கும் முன்
கிழித்து எறிந்த காலம் அது...

பகிரப்படாத உணர்வுகளோடு
பரிதாப நிலையில் 
செல்லரித்து போன 
என் கவிதையின்
ஒரு செல் உயிர் பெற்று வந்தது
----------உன்னால் ------
நன்றி எழுத்து. காம்

எழுதியவர் : Karikayal (15-Mar-20, 2:13 pm)
சேர்த்தது : தான்ய ஸ்ரீ
Tanglish : eluthu kaaum
பார்வை : 119

மேலே