ஒரு ஆறுதல்

என்னை பலவீனமாக்கி அதை
அவனுக்கு சாதகமாக்கி

நம்பவைத்து நாடகமாடிய அவன்

மனநிலை சரியில்லாதவன் என்று
புரிய

இளமையோடு சேர்த்து வருடங்களையும்
விலையாய் தந்தபின்

நடுத்தெருவில் நான் கைத்துடைத்து
எறிந்த காகிதமாய்

ஒரு ஆறுதல் சனியன் விட்டதென்று
சமாதானமாகிப்போனேன்

எழுதியவர் : நா.சேகர் (16-Mar-20, 7:02 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : oru aaruthal
பார்வை : 358

மேலே