கேள்விக்குறியானது
சுதந்திரப் பறவையாய் இருக்க என்னை
அனுமதித்தார்கள்
சிலவேட்டை நாய்கள் துரத்தியது
வேட்டையாட சிக்கவில்லை
தப்பவிடகூடாதென நயவஞ்சக வலைவிரித்ததொன்று நம்பிய நான்
மனப்போக்கு தெரியாது மாட்டிக்கொள்ள
என்சிறகை பிய்தெறிந்து என் வேதனையை ரசிக்கின்றது
பறக்க சக்தியற்ற பறவையான என் சுதந்திரம் கேள்விக்குறியானது