அன்றில் பறவையாய்

கண் வீச்சில் வெல்லும் பெண்ணே
உன் அன்பில் கொல்லு என்னை!

தினம் புன்னகை பூப்பது எதற்கு கண்ணே?
என்னை மயக்கி கொல்லத்தானே!

உன் கன்னக்குழியில் வீழ்ந்து போனேன்
இனி மீள்வதென்பது கடினம்தானே...!

பக்கம் வாவென அழைத்து
கை கொடுத்தால் என்ன?

உன் மடியில் வீழ்ந்து
செத்தா போவேன்?

தினம் மீண்டெழுந்து
உன்னோடு வாழ்வேன்

இணை பிரியா
அன்றில் பறவையாய்...!

எழுதியவர் : கிச்சாபாரதி (16-Mar-20, 10:42 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
Tanglish : andril paravaiyyaay
பார்வை : 83

மேலே