சத்யபாதையில் நடப்போம்

சத்யபாதையில் நடப்போம்..
வெற்றி முரசு கொட்டு
நெற்றிக்கண் திறப்பினும்
குற்றம் என சுட்டு
இயலாதது ஏதுமில்லை
இவ்வுலகிலே
முயன்றால் வரும்
எல்லாம் உன்னருகிலே!
குத்தியமுள்ளானாலும்
குனிந்து தான் எடுக்கவேண்டும்
சாத்தியபாதையில் நடக்க
சோதனைகளை
சந்திக்கத்தான் வேண்டும்
இடையூர்களின்றி இங்கே
சாதித்தவர்கள் யாருமில்லை
வல்லூறாய் இருந்துப்பார்
வானமேயாகும் எல்லை !
சிறகை விரித்தால்தான்
சிகரத்தின்மேலே பயணம்
கரடுமுரடான பாதைகள் - நமக்கு
கற்று தரும் ஆசான்கள்
பொய்மையில்
ஊறிய உலகமிது
பொய்கையில்
பூக்குமோ மல்லியது!
பொன் பொருளில்
வாழ்வதல்ல மகிழ்ச்சி
உதவும் எண்ணமும்
மனிதநேயமும் இல்லாவிடின்
வாழ்வாகும் வீழ்ச்சி
உபதேசம் உலகுக்குமட்டுமல்ல
உனக்கும் தான்
சொல் அதன்படி செல் !

இவன் மு. ஏழுமலை

எழுதியவர் : மு. ஏழுமலை (17-Mar-20, 2:21 pm)
சேர்த்தது : மு ஏழுமலை
பார்வை : 82

மேலே