உலக தண்ணீர் தினம்☔
பூமித்தாயின்
தேகத்திலே துளையிட்டு
மரங்கொடிகளின்
உணவுகளை நாம் களவாடி
கருவில்
உள்ள பிள்ளைகளை முடமாக்கி
குருதி குடிக்கும்
மிருகங்களாய் நாம் வாழ
மரமெல்லாம் வாடுதே
வான் மழையோ
சமுத்திரம் நோக்கி பாயுதே
குளம் குட்டையெல்லாம் சேமிக்கிறோம்
நாளை தலைமுறை வாழவா
குப்பைகளை?
நீரின்றி அமையாது உலகு
நீர் நிலைகளில் குப்பை கொட்டாமல் பழகு!
மாறுவோம்! மாற்றும்வோம்!
மழைநீரை சேமிப்போம்
நாளை பூமியில் உயிர்கள் வாழ
உலக தண்ணீர் தினம்
நாளை மரங்களின் கண்ணீர் தினம்
வேண்டாம்.........
வேதனையோடு ர ஸ்ரீராம் ரவிக்குமார்