இயற்கை
அறுவடைக்கு காத்திருக்கும் நெற்கதிர்கள்
தங்கக் கதிர்களென இளங் காலைத் தென்றலின்
தெம்மாங்கில் அசைந்து அசைந்து ஆடிட
ஆடும் தங்க வயலாய் ஆனதே அதைக்கண்டு
ஆனந்தத்தில் குதுகூலமானது என்னுள்ளம் அப்பொழுது
குண திசையில் வந்தடைந்த கதிரவன் கிரணங்கள்
தங்கவயலில் பட்டு எங்கும் தங்க ஒளி பரப்ப
பக்கத்து சிறு குன்றும் அவ்வொளியில் தங்க மலையானதே
தங்க நிலவென்ன இளங் காலை கதிரோனும்
வெப்பம் தாராது குளிர வைத்தான்
இயற்கைக்கு நிகர் வையகத்தில் வேறொன்றும் இல்லையே
அழகின் இலக்கணம் நிலைநாட்ட