இமை பூக்க வேண்டும்

விண்மீன்கள் தரைபூக்க நிலமொளிர வேண்டும் !
வெண்ணிலவும் அதுகண்டு விழிவிரிக்க வேண்டும் !
மண்ணிலுள்ள மலர்களெல்லாம் விண்பூக்க வேண்டும் !
மங்கையரும் மையலுடன் அதைரசிக்க வேண்டும் !
தண்டலையில் மதிவரவில் மரைபூக்க வேண்டும் !
தண்ணீரில் மயிலாட அலைபூக்க வேண்டும் !
வண்டுகளின் ரீங்காரம் தாலாட்ட வேண்டும் !
வண்ணத்தில் கனவுகண்ட இமைபூக்க வேண்டும்!!!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (24-Mar-20, 1:23 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 47

மேலே