பிறப்பு முதல் இறப்பு வரை
கருமை ! ஏழு வண்ண வானவில் தான்
தாயின் கருவரையில்
நமது பிறப்பு எட்டாவது அதிசயம் தான்
பெற்றோர் மனத்திரையில்
தவழும் பிள்ளையின் தடம் அனைத்தும் முன்பிறந்து
அமைத்த பாதைகளே
அறுவடை கெய்யும் மழலை பேச்சும் முன்பிறந்து
விதைத்த விதைகளே
தன்னிலை உணர கல்வி மறந்து மதிப்பெண்
தகுதியாய் நிலவியது
கடல் போல கல்வி சுழ கனவுகள் யாவும்
தரையில் நீந்தியது
நாட்கள் நகர நண்பர்களும் நகரும் மேகமென
வாழ்வில் புரியும்
உயிரில் பூக்கும் காதலும் வாடிப் போகுமென
மனம் அரியும்
தேடல்கள் பலத் தொடர வீடு வாசலும்
பௌர்னமி போலவே
பெற்றோர் அடைக்கலமும் கோடைக் காலத்தில் வரும்
மழைப் போலவே
தொடரும் ஓட்டத்தில் துன்பங்களை துயில் ஆற்ற
வந்த துணைவி
உடல் கொடுத்து உயிர் கொடுக்கும் கண்கள்
கண்ட இறைவி
கைகள் பிடித்துக் உலகை கற்க என்னில்
உயிர் பெற்று
கைகள் பிடித்து இறுதி மூச்சில்
என்
மறுஉயிராய் நின்று
இறுதி மூச்சில் இதை செய்து இருக்கலாம்
என நினைக்காமல்
அதை செய்து விட்டு இறுதி மூச்சினை
விட நினைப்போம்
~ ஜெ சிருஷ்டி