🥗அடுப்பங்கரை காதல்🥗

🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
மிளகாய் போல மோசக்காரி...
முறைச்சு என்னை பார்க்காதடி.....
நெஞ்சுக்குள்ள நெடி ஏத்தாதடி.....

தண்ணிக்குள்ள போட்ட உப்பா
உன்னுக்குள்ள நானும் கரையுறேனே....

கண்ணுக்குள்ள கடுகை வைச்சு கண்டதுமே வெடிக்காதடி.......

கொத்தமல்லி வாசக்காரி
உசுர
கொத்து கொத்தா ஆயாதடி..

நான்
பட்டை சோம்பு போல பட்டைய கிளப்புற ஆளு......
கறிவேப்பிலை போல ---என்னை
தூக்கி எறியாதடி .

அனலில் பட்ட புழு போல 🍤
அனு அனுவாய் சாகிறேன்...
நெருப்பில் இட்ட நெய் போல-நானும்
நெஞ்சுருகி போகிறேன்..

என்னை ஏற்று கொள்ளேன்டி

எழுதியவர் : Karikayal (26-Mar-20, 10:48 am)
சேர்த்தது : தான்ய ஸ்ரீ
Tanglish : ADUPADI kaadhal
பார்வை : 165

மேலே