தைரியம் கொள்ளுங்கள்
பிறந்த எல்லாரும் மரணிக்கப்போவது உறுதி.
இடையில் பயந்து சாக வேண்டுமா?
வாட்சாப்பில் பூச்சாண்டி காட்டும் கோழைகளே!
நீங்கள் அல்லவோ முதலில் கொரோனாவால் காவு வாங்கப்பட வேண்டியவர்கள்.
மரணத்தைத் தாண்டி சத்தியம் வேறில்லை.
எத்தனை தடவை சொல்லுவது பைத்தியங்களே!
அமைதியாக இருங்கள்.
தன்னம்பிக்கையோடு இருங்கள்.
இறைபக்தி உண்டெனில் ஒவ்வொரு நொடியிலும் இறைவனை சேபித்தவாறு இருங்கள்.
மரணம் கண்டு அஞ்சாதீர்கள்.
பயம் கொண்டு புகலிடம் தேடாதீர்கள்.
எங்கு செல்வீர்கள்?
இருந்த இடத்திலேயே இருங்கள்.
இறைவனைச் சேபியுங்கள்.
பதறாதீர்கள்.
பயப்படாதீர்கள்.
நடப்பதெல்லாம் நன்மைக்கே!
இதுவும் கடந்து போகும்...