கொரோனா கவிஞர் இரா இரவி
கொரோனா ! கவிஞர் இரா .இரவி !
கண்ணுக்குப் புலப்படாதா கிருமி கொரோனா
கண்இமைக்கும் நேரத்தில் தோற்றும் கொரோனா!
காட்டுத் தீயை விட வேகமாகப் பரவுது கொரோனா
கட்டுப்பட்டு வீட்டில் இருப்பது நலம் பயக்கும் !
மின்னலை விட விரவாகப் பரவுது கொரோனா
மனிதர்கள் சிந்தித்து செயல் படுவது சிறப்பாகும் !
சீனாவை சின்னா பின்னமாகியது கொரோனா
ஜப்பானின் கப்பலையும் விடவில்லை கொரோனா!
இத்தாலியின் இடுப்பை ஒடித்துவிட்டது கொரோனா
அமெரிக்காவை ஆட்டம் காண வைத்தது கொரோனா !
துபாய் அரேபியா என எங்கும் பரவியது கொரோனா
தனிமையில் இருந்து கொடிய பரவல் தடுப்போம் !
அனைத்து நோய்களுக்கும் மருந்து கண்டவன் மனிதன்
அகிலம் அச்சப்படும் கொரானாவிற்கும் மருந்து காண்பான் !
அதுவரை அடங்கி ஒடுங்கி இருப்போம் இல்லத்தில்
அச்சம் தவிர்த்து அடிக்கடி வெளியேற வேண்டாம் !
மனிதர்களின் உயிர் பறிக்கும் கொரோனாவின் உயிரை
மனிதன் பறிக்க விரைவில் மருந்து காண்பான் உறுதி !
ஒரேயடியாக கொரோனாவை ஒழிப்பது உறுதி நம்புங்கள் !
ஒத்துழைப்பை நல்கி அனைவரும் உதவிடுவோம் !