தனித்திரு கொரொனாவை தடுத்திடு
சேதம் களைவோம் !
தேசம் காப்போம்!!
கொரோனா எனும் பேரரக்கனை
வேரறுப்போம்!!
எல்லைகளைக்கடந்து
தீ உமிழும் உயிர்க்கொல்லி!
மனித இனத்தின்
வாழ்வை முடக்கும் பிணந்தின்னி!!
செய்வதுயாதென
கண்ணீருடன்
தவிக்கும் வல்லரசுகள்!
வீதியெங்கிலும்
குவியலாய்
கேட்பாரற்று
சடலங்கள்!!
தூய்மை, தனிமை பொறுமை கொண்டு!
பேரழிவை வெற்றிகாணும்
வழி உண்டு!!
பொறுப்புணர்வு , விழிப்புணர்வு , சுயத்தெளிவு!
பொதுநலன் கருதிடின்
நல்விடிவு!!
மனதிணைந்து
தாய் தேசம் காப்பது மாண்பு!
சமூக விலகலே
எதிர்த்துயர் களையவல்ல
நோன்பு!!
_பாவலர். வில்லியனூர்.தேவ. கருணாகரன்,
புதுச்சேரி.