நோய்நாடி நோய் முதல்நாடி
நோய்நாடி நோய்முதல் நாடி
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதனிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் ( குறள் 948 )
நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணமாக ஆராய்ந்து அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து,
உடலுக்கு பொருந்தும் படியாக மருந்தை அறிந்து கொடுக்க வேண்டும். அதிகம் x
மூவகை நாடியறிய (வாத, பித்த , ஐயம்)
குறியாம் வலக்கரங் குவித்த பெருவிரல்
மறிவாய் அதன்கீழ் வைத்திடு மூவிரல்
புரிவாய் மேலேற்றி பிலத்தது வாதமாம்
அறிவாய் நடுவிரல் அமர்ந்தது பித்தமே. (திருமூலர் வைத்தியம் 23/600)
வலது கரம் குவிந்திருக்க பெரு விரலின் கீழே மணிக்கட்டில் வைத்துடு மூன்று விரல்களை மணிக்கட்டின் அருகே
பலமாக ஓடுவது வாதம் நடு விரல் அறிவது பித்தம். அதற்கும் கீழே ஒடுவது ஐயம்.
பித்தத்தின் கீழே புரண்டது ஐயமாம்
உற்று ப்பார்க்க ஓர் நரம்பே யோடும்
பத்தித்த மூவரும் பாய்கின்ற வேகத்தால்
மத்தித்த தாளம்போல் வழங்கும் நரம்பிதே. ( 24/600)
இதைப் பித்தம் ஒரு மாத்திரை என்றால் அதில் பாதி மாத்திற பிதம் நடக்கவும் ஒரு மாத்திரையில் கால்பாகம்
ஊர்ந்திதட அது ஐயமாகும். ஐபாடி நடந்திடில் வியாதி இல்லையாம்.
வழங்கிய வாதம் மாத்திரை யொன்றாகில்
வழங்கிய பித்தந் தன்னிலரை வாசி
அழங்குங் கபந்தான் அடங்கியே உள்ள
பிழங்கிய சீவற்கு பிசகொன்று மில்லையே. 25/600
இல்லையே வாதம் எழில்நடைக் கோழியாம்
எல்லை பித்தம் எழும்பும் தவளைபோல்
ஒல்லையே ஐயம் ஊர்ந்திடும் பாம்புபோல்
அல்லையே கண்டு அறிந்தவர் சித்தர். 26/600
கோழிபோல் தூக்கி நடப்பது வாதநாடி ,தவலைபோ எகிறி எகிறி நடப்பது பித்தம் , பாம்புபோல் ஊர்வது ஐயமாம்.
பதினெண் சித்தர்களும் அறிவுசார்ந்தஇருபத்தி ஐந்து பிரிவுகளில் ஒன்றான
மருத்துவம் நோய் சாகா மருந்தை ஆய்ந்து செய்து உண்டு இன்றும்
சாகதிருப்பவர்கள்.