காதல் வலி
அவன் தந்த காதல் வலியை மனதில்
சுமந்து வந்தேன் இத்தனை நாள்
காதல் புத்தகத்தின் சில கிழிந்த பக்கங்கள்போல்
அந்த கிழிந்த பக்கங்களை ஊடுருவி
இருந்த சில இனிய நினைவுகள் என்
எண்ணத்தின் முன்னே நினைவலைகளாய்
இன்பம் தரும் வலிபோல் .... வானவில்லாய்
வந்தும் மறைவதுமாய்.....
இன்று இதற்கொரு முடிவு காண நான்......
இன்னும் எதற்கிந்த பாழாய்ப்போன வலி
மனதை விட்டு இறக்கிவைத்தேன்
சபலங்கள் எல்லாம் மனதை விட்டு நீங்க
இதோ வலி ஏதுமில்லா என் மனது
அதில் இனி வேறொருவருக்கு இடமில்லை
நான் இப்போது காதலிப்பதெல்லாம்
என் பணியொன்றே .........
நான் .... நான் இறைவன் தொண்டில்